››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அனர்த்த நிவாரண வேலைகளில் ஈடுபட்டோர் கடற்படையினரால் கௌரவிப்பு

அனர்த்த நிவாரண வேலைகளில் ஈடுபட்டோர் கடற்படையினரால் கௌரவிப்பு

[2016/05/27]

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டிலுள்ள அனைவரும் இணைந்து உதவிகளை செய்தனர். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்பட்டது. இதேவளை, அரநாயக்க எலங்கபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலை நாட்டு பகுதியின் அனேகமான கிராமங்கள் முழுமையாக மண்ணிற்குள் புதையுண்டது. இதன்போது அனேகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் பல பில்லியன் பெறுமதியான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முப்படையினர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் முதன் முதலாக முப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சீரற்ற காலநிலையும் பொருட்படுத்தாது தமது உயிர்களை துச்சமாக மதித்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டமை பலராலும் பேசப்பட்டது.

மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட படைவீரர்களை பாராட்டும் வகையில் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்தீர விஜேகுணவர்தன அவர்களின் தலைமையில் உஸ்வெட்டகியவ கிளப் கௌவசில் (மே.24,25) ஒரு நிகழ்வு இடம்பெற்றது. இச்சிறந்த சேவையில் ஈடுபட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அனர்த்தின் பின்னரான வேலைத்திட்டங்களில் 100 கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளுக்கு மீளத் திரும்புவதனால் இஹல பொமிரியா, வெலிவிட்ட, முல்லேரிய, உடமலுவ, கடுவெல, அங்கொட மற்றும் பல பிரதேசங்களில் காணப்படுகின்ற கிணறுகள் மற்றும் கால்வாய்களை சுத்தம் படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்