››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகப்புச் செயலாளர் ‘இலங்கை கடற்படைக் கப்பல் சயுரல’ வின் முன்னோட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்

பாதுகப்புச் செயலாளர் ‘இலங்கை கடற்படைக் கப்பல் சயுரல’ வின் முன்னோட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்

இலங்கை கடற்படைக் கப்பல் சயுரலாவை இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் வைத்து பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜுன்10) ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.வசாந்த குணவர்தன மற்றும் கடற்படைதளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேம்பட்டுத்தப்பட்ட ஆழ்கடல் ரோந்துப் படகு வகையையைச் சேர்ந்த இலங்கை கடற்படைக் கப்பல் சயுரலவின் உற்பத்த்திக்கான செலவு சுமார் 74 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அத்துடன் இக்கப்பலானது ஹெலிகொப்டர் இறங்கு தளத்தைக் கொண்டிருப்பதுடன் சுமார் 2350 தொன் கொள்திறன் கொண்டது. மேலும் இக்கப்பல் 4500 மைல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான திறனைக் கொண்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் விமானவியல் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு உற்பத்திகளுக்கான இணை செயலாளர் ஸ்ரீ சஞ்சய் பிரசாத், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அதிமேதகு எசல வீரக்கோன் மற்றும் திருமதி வீரக்கோன், கடற்படை பயணங்களுக்கான கொடி அதிகாரியும் கோவா பிராந்திய கொடி கட்டளை அதிகாரியுமான ரியர் அட்மிரல் புனீத் குமார் பா மற்றும் திருமதி புனீத் குமார், இந்திய முன்னாள் கடற்படை தளபதிகளான அட்மிரல் (ஓய்வு) அருண் பிரகாஷ் மற்றும் அட்மிரல் (ஓய்வு) சுரீஸ் மேத்தா, வரையறுக்கப்பட்ட கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் சேகர் மிட்டல் மற்றும் திருமதி சேகர் மிட்டல் உள்ளிட்ட இலங்கை மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.,
மேலும் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் பரஸ்பரம் நினைவுசின்னகள் பரிமாரிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்