››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

துருக்கி – இலங்கை ஒத்துழைப்பினை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்

துருக்கி – இலங்கை ஒத்துழைப்பினை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்

[2016/06/16]

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள துருக்கி வெளிநாட்டு அமைச்சர் மெவுலட் கௌசோக்லு (Mevlut Cavusoglu) இன்று (15) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

துருக்கி – இலங்கை ஒத்துழைப்பினை அதிகரிப்பது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் இலங்கையானது பொருளாதார ரீதியில் பல்வேறு வெற்றிகளை அடைந்துகொள்ள முடியுமென தெரிவித்த துருக்கி வெளிநாட்டு அமைச்சர் இதற்காக துருக்கி அரசினால் வழங்க முடியுமான சகல உதவிகளையும் வழங்குவதாக குறிப்பிட்டார்.

அன்று தொடக்கம் இரு நாடுகளுக்குமிடையே நிலவும் நட்புறவை தொடர்ந்தும் அதிகரிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் Tunca Ozuhadav உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்