››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்கம மீள்கட்டுமான பணிகள் தொடர்கிறது

கொஸ்கம மீள்கட்டுமான பணிகள் தொடர்கிறது

[2016/06/16]

வேலைகளை துரிதப்படுத்த ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 200ற்கு மேற்பட்ட வீடுகளின் திருத்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது

இராணுவத்தினரின் சாலாவ ஆயுத களஞ்சிய சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களின் மீள்கட்டுமானப் mபணிகளில் முப்படையினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இம் மீள்கட்டுமானப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் நிருவாக செயற்பாடுகளை இலகு படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த செவ்வாய் கிழமை (ஜுன், 14) வரையிலான காலப்பகுதியில் சுமார் 202 வீடுகள் முழுமையாக புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றையதினம் மற்றொரு தொகுதி வீடுகளின் திருத்தப் பணிகளை 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்யும் வகையில் துரித மீள்கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இத்துரித மீள்கட்டுமான பணிகளில் ஒரு கட்டமாக நேற்று 78 வீடுகளை திருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சேதத்திற்குள்ளான சாலவ அரச வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு வைத்தியசாலையின் நாளாந்த பணிகளுக்காக கடந்த திங்கள் கிழமை வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கொஸ்கம வைத்தியசாலையின் திருத்தப் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட சுமார் 1296 கிணறுகள் சுத்தீகரிக்கப்பட்டு நீரின் தரமும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபின் மீளவும் மக்களின் பாவனைக்கென வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பவ்சர் இயந்திரங்களின் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கடந்த செவ்வாய் கிழமை முதல் மீள்கட்டுமான பணிகள் பின்வரும் பிரிவுகளுக்கான சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்று வருகின்றது.

பிரிவு 1. சாலாவ 1 - இலங்கை இராணுவத்தின் பொறியியல் சேவைகள் படையணி.

பிரிவு 2 ரணவிருகம - இலங்கை இராணுவத்தின் பொறியியல் சேவைகள் படையணி தலைமையகம்.

பிரிவு 3. ஆனந்தகம - இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர்கள் 1வது படைப்பிரிவு.

பிரிவு 4. பொரளுகொட - இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர்கள் 4வது படைப்பிரிவு.

பிரிவு 5. முருதகம - இலங்கை கடற்படை.

பிரிவு 6. சாலாவ 11 – இலங்கை விமானப்படை.

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

 

கொஸ்கம மீள்கட்டுமானப் பணிகள் முன்னேற்றகரமான நிலையில

 

வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் இராணுவத்தினர்

 

கொஸ்கம அரச வைத்தியசாலை புனரமைப்பிற்கு கடற்படையினர் உதவி

 

கொஸ்கம மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகள் ஆகியன இராணுவத்தினரால் நன்கொட

 

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம

 

கொஸ்கமவில் பாதிக்கப்பட்ட 51 வீடுகளின் திருத்தப் பணிகள் பூர்த்தி –
இராணுவம

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கம பிரதேசத்திற்கு மீண்டும்
விஜயம

 

கொஸ்கமவில் சீரமைப்பு பணிகளை நிறைவுசெய்ய இராணுவம் உறுதி

 

கொஸ்கம- சலாவ வெடிவிபத்து தொடர்பாக ஆராய வெவ்வேறான
விசாரணைகள்

 

கொஸ்கம மீள் கட்டுமானப் பணிகளில் இராணுவம

 

மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்ப

 

பாரிய சுகாதார பிரச்சினைகள் இல்லை

 

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக
பாதிக்கப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் மீள புனரமைக்கப்படும

 

ஊடக அறிக்கை

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கமவிற்கு விஜயம

 

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த
நடவடிக்கை

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்