››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்கமவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவம் சமையல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொஸ்கமவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவம் சமையல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

[2016/06/17]

இராணுவத்தினரின் சாலாவ ஆயுத களஞ்சிய சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50எரிவாயு அடுப்புக்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (ஜுன.16) கொஸ்கமவிலுள்ள பொருளுகொட சிறி வரத்தனாராமயா விகாரையில் நடைபெற்றது.

இச்செயற்றிட்டம் சிறி வரத்தனாராமயா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய ஹெவில்வெல ஞானாந்த தேரோ அவர்களினால் மேற்கொண்ட ஆலோசனைக்கு அமைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இராணுவத்தினரின் சாலாவ ஆயுத களஞ்சிய சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உட்பட பாதிக்கப்பட்ட வீடுகளை புணர் நிர்மாணம் செய்தல், கிணறுகளை சுத்தப்படுத்தல், பவ்சர் மூலம் குடி நீர் வழங்குதல்,மருத்துவ உதவிகள்,சமைத்த உணவு வழங்குல், தற்காலிக கொட்டில் அமைத்துக் கொடுத்தல் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் அமைத்துக் கொடுத்தல் போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கின்ற பணிகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய மஹா சங்க உறுப்பினர்கள், சிரேஷ்ட இராணுவ உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சீதாவாக பிரதேச செயலகத்தின் உதவியுடன் இராணுவத்தினரால் நன்கொடையும் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், படுக்கைகள் மற்றும் தலையணைகள் ஆகியவற்றை ‘மனவ சத்கராகபடநம’ விடமிருந்து இராணுவத்தினர் பெற்றுக் கொண்டதுடன் ‘தே புத்திஸ்ட்’ தொலைக்காட்சி அலைவரிசையின்’ தலைவர் மற்றும் சமபோதி விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய தனகம குசாலதம்ம நாயக்க தேரோ ஆகியோரும் ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களையும் நன்கொடையாக வழங்கி வைத்தனர்.

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

 

கொஸ்கம மீள்கட்டுமான பணிகள் தொடர்கிறது

 

கொஸ்கம மீள்கட்டுமானப் பணிகள் முன்னேற்றகரமான நிலையில

 

வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் இராணுவத்தினர்

 

கொஸ்கம அரச வைத்தியசாலை புனரமைப்பிற்கு கடற்படையினர் உதவி

 

கொஸ்கம மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகள் ஆகியன இராணுவத்தினரால் நன்கொட

 

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம

 

கொஸ்கமவில் பாதிக்கப்பட்ட 51 வீடுகளின் திருத்தப் பணிகள் பூர்த்தி –
இராணுவம

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கம பிரதேசத்திற்கு மீண்டும்
விஜயம

 

கொஸ்கமவில் சீரமைப்பு பணிகளை நிறைவுசெய்ய இராணுவம் உறுதி

 

கொஸ்கம- சலாவ வெடிவிபத்து தொடர்பாக ஆராய வெவ்வேறான
விசாரணைகள்

 

கொஸ்கம மீள் கட்டுமானப் பணிகளில் இராணுவம

 

மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்ப

 

பாரிய சுகாதார பிரச்சினைகள் இல்லை

 

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக
பாதிக்கப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் மீள புனரமைக்கப்படும

 

ஊடக அறிக்கை

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கமவிற்கு விஜயம

 

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த
நடவடிக்கை



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்