››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அவுஸ்திரேலியக் கடற்படையின் எச்எம்ஏஎஸ் பேர்த் கப்பலிற்கு செயலாளர் விஜயம்

அவுஸ்திரேலியக் கடற்படையின் எச்எம்ஏஎஸ் பேர்த் கப்பலிற்கு செயலாளர் விஜயம்

[2016/06/21]

அண்மையில் நல்லெண்ண நோக்கில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் ‘எச்எம்ஏஎஸ் பேர்த்’ எனும் கப்பலிற்கு பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் நேற்று (ஜுன்.20) விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த செயலாளர் ஹெட்டியாரச்சி அவர்களை அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு பிரைஸ் ஹட்சென் மற்றும் கப்பலின் கட்டளைத்தளபதி ஆகியோர் வரவேற்றனர். அத்துடன் விஷேட பிரமுகர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னபாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிக அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும், கடற்படையினருடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினாரல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் அவுஸ்திரேலியப் போர்க்கப்பலின் மாலுமிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
குறிப்பிட்ட இக்கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்குவுள்ளது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்