››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு மற்றும் கடற்றொழில் அமைச்சுக்களிடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பாதுகாப்பு மற்றும் கடற்றொழில் அமைச்சுக்களிடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து

[2016/06/22]

பத்தரமுல்லையில் நேற்று மாலை (ஜுன், 21) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றிற்கிடையே இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கடற்றொழில் அமைச்சின் சார்பில் அவ்வமைச்சின் செயலாளர் திருமதி. மல்லிகா அதிகாரிகம அவர்களும் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இவ்வொப்பந்த்தத்தின் கீழ் ஆட்கடத்தல், சட்டவிரோதமாக மீன்பிடித்தல், போதை மருந்து கடத்தல் மற்றும் மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள் என்பனவற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் அறிவுரைகளுக்கமைய இலங்கை கடற்படையானது கடற்றொழில் அமைச்சுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கை கடற்படையானது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நாட்டின் கடல் எல்லை தொடர்பாக மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் என்பனவற்றை வழங்கவுள்ளது,

இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, தேசிய நீரியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் தலைவர் டாக்டர் அனில் பிரேமரத்ன ஆகிடோரிடையே மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமானது கடல் வளங்களை அடையாளம் காணல், நீரியல் பரப்பு வரைபடமாக்கள் ஆகியவற்றில் இரு தரப்பினரும் இணைந்து செயற்பட வழி வகுக்கின்றது.

மேற்படி நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. மகிந்த அமரவீர, இரு அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்