››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிரிபத் கொட விஹார மஹா தேவி பாலிகா வித்தியாலய உள்ளக அரங்கு திறப்பு விழாவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

கிரிபத் கொட விஹார மஹா தேவி பாலிகா வித்தியாலய உள்ளக அரங்கு திறப்பு விழாவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

கிரிபத் கொட விஹார மஹா தேவி பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்ற உள்ளக அரங்கை திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேற்படி நிகழ்வு பிரதமர் கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த பாடசாலையின் விளையாட்டு வசதிகளை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இங்கு உரையாற்றுகையில்...

வாழ்க்கை திறன்கள், சுகாதாரம், உறுதிப்பாடு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை விருத்தி செய்ய விளையாட்டு இன்றியமையாத ஒன்றாகும் எனத் தெரிவித்தார். அத்துடன் உலக தரத்திற்கு அமைவாக கல்விக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் இணைந்து நாட்டிற்கு புதியதொரு கல்வி முறைமையை அறிமுகப்பட்டத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவறிற்கு சம அந்தஸ்த்தை கொடுக்குமாறும் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்