››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அமெரிக்க கடற்படை செயலாளர் திருகோணமலை கடற்படை கப்பற் தளத்திற்கு விஜயம்

[2016/08/22]

 

இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையினரிடையே திருகோணமலை கடற்படை கப்பற் கட்டும் தளத்தில் தற்போது இடம்பெற்றுவரும் கூட்டு பயிற்சியினை பார்வையிடும் வகையில் அமெரிக்க கடற்படை செயலாளர் கௌரவ. ரேய் மபுஸ் அவர்கள் திங்களன்று (ஆகஸ்ட்.22) விஜயமொன்றினை மேற்கொண்டார். அங்கு வருகை தந்த கடற்படைச் செயலாளரை குழுவினரை கடற்படைத் தளபதி, வைஸ் அடமிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் வரவேற்றதாக கடற்படை ஊடகம் தெரிவிக்கின்றது.

மேலும், கடற்படை இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற பயிற்சி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு கடற்பிராந்திய கட்டளைத் தளபதி உள்ளிட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 

 

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்