››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

9வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

9வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

[2016/08/23]

பனாகொடை இராணுவ முகாமின் உள்ளக விளையாட்டரங்கில் திங்களன்று (ஆகஸ்ட்.22) நடைபெற்ற 9வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் ஜனாதிபதி கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற இவ்விளையாட்டு போட்டியில் இலங்கை இராணுவம் 120 தங்கம், 130 வெள்ளி மற்றும் 127 வெண்கலப் பதக்கங்களைச் சுவீகரித்து சகலதுறை சாம்பியனாக வெற்றிவாகை சூடிய அதேவேளை, இலங்கை கடற்படை, 95 தங்கம், 81 வெள்ளி மற்றும் 120 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் இலங்கை விமானப்படை 84 தங்கம் ,78 வெள்ளி மற்றும் 113 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள், ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் அமையத்தின் மூலம் முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளை கடைபிடிக்குமாறு எவ்விதத்திலும் வற்புறுத்தப் படவில்லை எனவும் ஆனால், குற்றச்சாட்டிலிருந்து நீங்கும் வகையில் நாட்டில் அனைத்து துறைகளிலும் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் பாரபட்சமின்மை என்பன சர்வதேச சமூகத்திற்கு வெளிக் கொனரப்பட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி எனும் வகையில் நாட்டில் சுதந்திரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக போரிட்ட வீரர்களை பாதுகாப்பது தனது தலையாய கடமை எனவும் வலியுறுத்தினார்.

மேலும், குறுகிய அரசியல் இலாபங்களை பெற்றுக் கொள்வதற்காக போர் வீரர்களை வேதனைப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்படும் அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி மறுத்துரைத்ததுடன் இந் நாட்டு மக்கள் மற்றும் முப்படை வீரர்கள் ஆகியோரின் கெளரவமான எதிர்காலத்திற்காக அரசாங்கம், பிரச்சினைகளை தெளிவாகவும் கவனமாகவும் ஆராய்ந்து தீர்க்கமான முடிவுகளை எட்டும் எனவும் தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, தனது தலைமையின் கீழுள்ள தற்போதைய அரசாங்கம் இக்கடினமான சவாலுக்கு முகம் கொடுக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

நிறைவாக அவர் தனது உரையில், முப்படை வீரர்கள் உள்நாடு மற்றும் சர்வதேச அரங்குகளில் பல்வேறு விளையாட்டுக்களில் பங்கு பற்றி பற்பல வெற்றிகளை ஈட்ட தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதற்கான முழு உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டி ஜனாதிபதி அவர்களின் உரையுடன் நிறைவு பெற்றது.

மேலும், இவ் விளையாட்டுப் போட்டி 2003 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் இப்போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. அடுத்த இராணுவ சேவை விளையாட்டுப்போட்டி 20018 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் நடத்தப்படவுள்ளது. இதன் அடையாள நிகழ்வாக பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டியின் கொடி விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ககன் பலத்சிங்கள அவர்களினால் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைத்தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், பெரும் எண்ணிக்கையிலான இராணுவ அதிகாரிகள் மற்றும் சிறுநிலை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்