››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

செப்டம்பரில் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2016”

செப்டம்பரில் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2016”

[2016/08/25]

பாதுகாப்பு அமைச்சின் அனுசரனையுடன் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” செப்டெம்பர் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது தொர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று (ஆகஸ்ட், 25) நடைபெற்றது.

இவ்வருடாந்த அனைத்துலக மாநாடானது தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச நலன்களில் காணப்படும் இடர்பாடுகளுக்கான துறைசார் நிபுணதத்துவத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தளத்தினை அமைக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் அனுசரனையுடன் இலங்கை இராணுவத்தினரால் 2011ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது.

கொழும்பு பாதுகாப்பு மாநாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இப்பாதுகாப்பு மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் ஆரம்ப நாளின் அங்குரார்ப்பன அமர்வின் போது பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.

“மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டு நடைபெறவுள்ள இந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை உட்பட 71 நாடுகளைச் சேர்ந்த 125 வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 800 பேர் பங்குபற்றவுள்ளனர்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள அமர்வுக்கு இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட புத்திஜீவிகள், ஆய்வாளரர்கள் மற்றும் கல்விமான்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், இம் மாநாட்டின் போது ‘வலுவின் கருப் பொருள்’, மென்வலு மற்றும் அதன் பல்வேறு செல்வாக்கு, மென்வலு அமைதியை கட்டியெழுப்புதல், ஆயுதப் படை மற்றும் அதன் செல்வாக்கு, மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்கள் தொடர்பான உப தலைப்புக்கள் அடங்கிய ஒன்பது அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்