››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி செப்டெம்பரில் ஆரம்பம்

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி செப்டெம்பரில் ஆரம்பம்

[2016/08/25]

இலங்கை இராணுவத்தின் களமுறைப் பயிற்சியான ‘நீர்க்காக தாக்குதல்–VII’ நிகழ்வு 7வது வருடமாக இம்முறையும் கிழக்கின் கொக்கிளாய் பிரதேசத்தில் இலங்கை இராணுவ, கடற்படை, விமானப்படை மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதல்களுடன் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு இராணுவத்தின் இலத்திரணியல் பொறியியல் சேவை ரெஜிமன்டின் கோட்போர் கூடத்தில் இன்று (ஆகஸ்ட், 25) நடைபெற்றது

பெருமளவிலான கொமாண்டோ மற்றும் விஷேட படைப்பிரிவினர் உள்ளடங்களாக 2500 இராணுவத்தின் காளாற் படையினர், 638 கடற்படை வீரர்கள் மற்றும் 506 விமானப் படை வீரர்களுடன் பங்களாதேஷ், சீனா, இந்தியா, ஜப்பான், மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு படைவீரர்கள் 49 பேரும் இந்த பயிற்சியில் பங்குபற்றவுள்ளனர்.

இக் களமுறைப் பயிற்சியில் விஷேட போர் முனை நடவடிக்கைகளின் போது இராணுவத்துடன் இணைந்து கடற்படை மற்றும் விமானப் படையினர் நெருக்கமான ஒத்துழைப்புடன் கூட்டாகவும் ஒரு அணியாகவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல், திட்டமிடல், கையாளுதல் மற்றும் கட்டளையிடுதல் போன்றவைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளன.

திட்டமிடல், தயார்படுத்தல், சூத்திரங்களை பயன்படுத்தல், ஒருங்கிணைத்தல், கட்டளை, கட்டுப்பாடு தந்திரோபாயங்கள் மற்றும் விஷேட நடவடிக்கைகள் என்பவற்றை உள்ளடக்கியதாகவே இந்த இந்த பயிற்சி அமைக்கப்பட்டுள்ளது

2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி மின்னேரியாவில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை தலைமையகத்தில் கூட்டாக இணைந்து நடைபெறவுள்ள பயிற்சிக்கான தயாரிப்பு தொடர்பான விரிவான கூட்டத்தைத் தொடர்ந்து கொக்கிளாயிலிருந்து பாரிய பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

‘நீர்க்காகம் தாக்குதல்- VII’ பயிற்சியின் பணிப்பாளராக செயற்படும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் கட்டளையின் கீழ் பயிற்சி பணிப்பாளர்கள், பயிற்சி பணிப்பாளர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது. பிரிகேடியர் ரெல்ப் நுகேரா, பிரிகேடியர் பிரதீப் சில்வா மற்றும் பிரிகேடியர் பிரியந்த பெரேரா ஆகியோர் பயிற்சிக்கான பிரதிப் பணிப்பாளர்களாகவும் பயிற்சிக்கு மேலதிகமாக கேர்ணல் நிஷாந்த ஹேரத் பிரதிப் பணிப்பாளராகவும் செயற்படவுள்ளனர்

கூட்டு கடற்படை பிரிவின் கட்டளை அதிகாரி கெப்டன் ரவீந்திர திஸ்ஸேரா, கூட்டு விமானப் படை பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி. கே.டி. ஜயசிங்க கடற்படை மற்றும் விமானப் படையின் கட்டளை அதிகாரிகளாக செயற்படவுள்ளனர்.
நீர்க்காக தாக்குதல் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வான் நடவடிக்கை பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ், கடற்படை ஊடக பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி, இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர ஆகியோர் கலந்து கொண்து இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்தனர.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்