››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'பிரினிவன் மாங்கல்ய' புத்த நாடகக் கதைப் பாடல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

'பிரினிவன் மாங்கல்ய' புத்த நாடகக் கதைப் பாடல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2016/08/26]

கொழும்பு தாமரைத் தடாக திரையரங்கத்தில் நேற்றைய தினம் (ஆகஸ்ட், 25) இடம்பெற்ற உலக முதல் தர புத்த நாடகக் கதைப் பாடல் 'பிரினிவன் மாங்கல்ய' எனும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்த்தன அவர்களும் கலந்து கொண்டார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர குணரட்ன அவர்களின் வழிகாட்டலின் பேரில் கேமதாச அறக்கட்டளை நிலையத்துடன் இணைந்து இலங்கை கடற்படை இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என்பன இலங்கை கடற்படை வீரர்களால் இசைக்கப் பட்டன.

'பிரினிவன் மாங்கல்ய' பௌத்த நாடகக் கதைப் பாடல், புத்தபிரானின் இறப்பினை பிரதிபலிக்கும் வகையில் பலியக விசாராய எனும் கண்டி யுக மரபுக்கு அமைய இயற்றப்பட்டு 2007ஆம் ஆண்டு இந்தியாவின் புத்தகாய எனும் இடத்தில் வெசாக் பௌர்ணமி தினத்தில் இசைக்கப்பட்டது. இறுதியாக இக்கீதம் பிரேமசிறி கேமதாச அவர்கள் இறந்தபோது கேமதாச அறக்கட்டளை நிலைய மாணவர்களால் இசைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, விமானப்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர், அதிதிகள் மற்றும் கடற்படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்