››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

“படை வீரர்கள் நினைவு தினத்தை” முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சில் நேற்று (ஆகஸ்ட், 30) இடம்பெற்ற வைபவத்தின்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடையே இடம்பெற்ற சந்திப்பின்போது இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் கே.ஏ. ஞானவீரவினால் மேற்படி பொப்பி மலர் அமைச்சர் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் அடையாளபூர்வ சின்னமாக முதலாவது பொப்பி மலர் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

பொப்பி மலர் தினம் என அறியப்படும் படைவீரர்களின் ஞாபகார்த்த தின நிகழ்வானது முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்கு பற்றி உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூறும் வகையில் பொதுநலவாயத்தின் அங்கத்துவ நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட இத் தினம் 1921ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி முதன் முதலில் பிரித்தானியாவில் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்