››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற தொனிப்பொருளில்- கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016”

“மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற தொனிப்பொருளில்- கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016”

[2016/09/01]

இலங்கை இராணுவத்தின் 6வது சர்வதேச மாநாடான கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2016 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) ஆரம்பமாகியது. குறித்த இம் மாநாட்டில் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. பீல்ட் மார்ஷல் சரத் பொண்சேக அவர்கள் பிரதம அத்தியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை உட்பட 71 நாடுகளைச் சேர்ந்த புத்தி ஜீவிகள் கலந்து கொண்டுள்ளரனர்.


பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களினால் முக்கிய உரை நிகழத்திய அதேவேளை,இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் அறிமுக உரை நிகழத்தப்பட்டது.
இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ஏற்படும் புதிய பிரச்சினைகளை முளையிலேயே கில்லியெரிய மென்வலு முக்கிய பங்கினை வகிப்பதுடன் கடின வலுவை பயன்படுத்துவதிலிருந்தும் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்தார்.
நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்ப பிரச்சினைகள் ஏற்படுதல் மற்றும் பரவுதல் போன்றவற்றை தடுக்க மென்வலு முக்கிய இடத்தைவகிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மென் வலுவில் தங்கியிருக்கும் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு விவகாரம் ஒன்று உருவாகும் போது மென் வலுவை பயன்படுத்தி அதனை கையாள முடியும் அதேசமயம், பயங்கரவாதம் போன்ற கடுமையான பாதுகாப்பு பிரச்சினை எழும் பட்சத்தில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க கடின வலுவை பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடின வலுவை பயன்படுத்துவதே சிறந்த தீர்வாக அமையும்.

எமது வெளிநாட்டுக் கொள்கை தற்பொழுது சரியானதாகவும் சமநிலையிலும் பயணிப்பதை காணமுடிகிறது. இதற்கு எமது ஜனாதிபதி ஆசியவை மையப்படுத்திய மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருவதாகும். மென்வலுவை மேலும் பல வழிகளைக் கொண்டு பயன்படுத்த முடியும்.

பொது இராஜதந்திரத்தின் சிறந்த வழியாகவே எமது கலாச்சாரம் காணப்படுகிறது. மொழி, சமயம் மற்றும் சட்டம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இலங்கையில் பலகலாச்சார தன்மை காணப்படுகிறது.

இந்த ஆறாவது பாதுகாப்பு மாநாடு மிகவும் பிரயோசனமானதாக அமையவுள்ளது. உலகயாவிய ஸ்தீரத்தன்மையில் காணப்படும் செல்வாக்கு மற்றும் மென் வலுவால் ஏற்படுகின்ற பிரயோசனங்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்திலான கருத்துக்களை பெற வாய்ப்பு கிடைக்கின்றன.

இலங்கையின் மென்வலு, பொது இராஜதந்திரம், பொருளாதார இராஜதந்திரம், இராணுவ மென்வலு போன்ற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றன. பொருளாதார இராஜதந்திரத்தின் மூலம் உலக அளவில் தமது இருப்பை இலங்கை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோன்று இராணுவ மென்வலும் முக்கியமான ஒன்றாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் எமது தேசிய பாதுகாப்பு சபையினதும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு இவ்வாண்டு பாதுகாப்பு மாநாடு நடைபெறுகின்றமை மற்றுமொரு விஷேட தன்மையாகும். தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் புதிய சிந்தனைகளுடன் செயற்படும் வகையில் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் நெருக்கமாக செயற்பட திட்டமிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் முடிவுற்று ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் எமது தலைமைத்துவம் அனுபவங்களை சர்வதேச சமூகத்தினருடன் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் மென் வலுவானது பயங்கரவாதம் போன்ற மோசமான பிரச்சினைகள் நாடுகளுக்கிடையில் ஏற்படுதல் மற்றும் பரவுதல் போன்ற வற்றை தவிர்ப்பதற்கு மிகவும் முக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எசல வீரக்கோன், இந்திய தேசிய பாதுகாப்பு பிரதி ஆலோசகர் அரவிந்த் குப்தா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள் உட்பட 70 நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

தொடர்பான செய்திகள் >>>

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” க்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இராணுவம்

செப்டம்பரில் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2016”



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்