››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கீரிமலை வீட்டுத்திட்டம் நிறைவுரும் நிலையில்

கீரிமலை வீட்டுத்திட்டம் நிறைவுரும் நிலையில்

[2016/09/09]

 

யாழ், கீரிமலை வீட்டுத்திட்டம் நிறைவு செய்யப்பட்டு சொற்ப தினங்களில் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.இவ்வீட்டுத்திட்டமானது உள்நாட்டினுள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் குடும்பகளுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற் கட்டமாக சுமார் 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றது.

அண்மையில் யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஊடகவியலார்கள் குழுவிற்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தை பார்வையிடுவதற்கும் இத்திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுவதற்கும் வழிவகைகள் செய்து கொடுக்கப்பட்டன. ஊடகவியலார்களின் யாழ் விஜயம் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மேலும் ஊடகவியலாளர்கள் இத்திட்டத்தை முன்னெடுக்கும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் ஆகியோரிடையே கலந்துரையாடி இத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

மேற்படி வீடமைப்பு செயற்றிட்டம் அரச நிதியுதவியுடன் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இங்கு அமைக்கப்படும் ஒவ்வொரு வீடும் இரண்டு படுக்கையறைகள், நீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் கொண்டது.அத்துடன் இதற்கு மேலதிமாக வீதிகள், விளையாட்டு மைதானம், முன்பள்ளி உள்ளிட்ட பல பொது வசதிகளையும் கொண்டமைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீடும் உயர் தரத்துடன் பேணப்படுகின்றதுடன் அவைகள் பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் நிர்மாணிக்கப் படுகின்றது. இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது யாழிற்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களை மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க சந்தித்து கலந்துரையாடினார்.

தொடர்பான செய்திகள் >>>

இராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகள் கீரிமலை வீட்டுத் திட்டத்தை கட்டுகின்றனர

யாழ் குடாநாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்காக புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் இராணுவம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்