››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

 இரணுவத்தினரால் 80வயது தாயருக்கு வீடு நிர்மாணம்

இராணுவத்தினரால் வயோதிப தாயாருக்கு வீடு நிர்மாணம்

[2016/09/19]

வெலிகந்தவிலுள்ள 81வயது தாயாருக்கு வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான உதவியினை இலங்கை இராணுவத்தினர் வழங்கினர். குறித்த இவ்வயோதிபத்தாய் தனது ஐம்பத்தைந்து வயது கன்னி மகளுடன் பல கஷ்டங்களுக்கு மத்தியில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்த அவல நிலை ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொணரப்பட்டது.

இதனையடுத்து குறித்த வயோதிப தாய்க்கான வீட்டினை அமைத்து கொடுக்கும் திட்டத்தை இராணுவமும் நன்கொடையாளர் ஒருவரும் இணைந்து முன்னெடுத்தனர். குறித்த இவ்வீட்டினை நிர்மாணிப்பதற்கான மனித வலுவினை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் வழங்கிய இதேவேளை, ரூபா.1.3 மில்லியன் பெறுதியான கட்டிடப் பொருட்களை நன் கொடையாளி ஒருவர் வழங்கியதாக இராணுவச் செய்தி ஊடகம் தெரிவிக்கின்றது.

மேலும், நிர்மாணிக்கப்பட்ட குறிப்பிட்ட வீட்டினை 81 வயது நிறைந்த விதவையான திருமதி. டீ.ஆர் சோமாவதிக்கு அண்மையில் (செப்டம்பர்.14) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி மற்றும் நன்கொடை வழங்கிய திரு. சனத் பிரேம ரதன ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்