››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“உவர்மலை இராணுவ நூதனசாலை” பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

“உவர்மலை இராணுவ நூதனசாலை” பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

[2016/09/20]

திருகோணமலை 22 வது படைப்பிரிவின் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட உவர்மலை இராணுவ நூதனசாலை வைபவரீதியாக நேற்று (செப்டம்பர்,19 ) திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தின் அழகிய காட்சிகளை இரசிக்கக் கூடிய வகையில் உவர்மலையின் உயர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இத்திறந்தவெளி நூதனசாலையின் அங்குரார்ப்பன வைபவத்தில் கலந்து கொண்ட இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட இந் நூதனசாலையில் காலாட்படை ஆயுதங்கள், கவச வாகனங்கள், பீரங்கிப்படை துப்பாக்கிகள் மற்றும் விரிவான காலனித்துவ மற்றும் தற்கால இராணுவ வரலாறுகளை சித்தரிக்கும் வகையில் வளவாளருக்கான கற் புல – செவிப்புல அறை என்பனவற்றை கொண்டுள்ளது. இந்நூதனசாலை இன்று (செப்டம்பர், 20) முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதுடன் இந்நூதனசாலை மூலம் பெறப்படும் நிதி படைவீரர்களின் குடும்பங்கள், அங்கவீனமுற்ற மற்றும் சேவையில் உள்ள படைவீரர்களின் சேமலாப நலன்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்