››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நீர்க்காக தாக்குதல் பயிற்சி - VII வெற்றிகரமாக நிறைவு

நீர்க்காக தாக்குதல் பயிற்சி - VII வெற்றிகரமாக நிறைவு

[2016/09/21]

”நீர்க்காக தாக்குதல் பயிற்சி - VII “ போர் களமுறைப் பயிற்சியின் இறுதி நடவடிக்கைகள் நேற்று (செப்டம்பர்,20) வெற்றிகரமாக நிறைவடைந்தது. எதிரிகள் பதுங்கியுள்ள இடங்களின் மீது பன்முகத் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரிசிமலை, யான் ஓயா மற்றும் திரியாய பகுதிகளில் இப்பயிற்சிகள் இடம்பெற்றன.

குறித்த இப்பபயிற்சியைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்து கொண்டார்.

 குறித்த இப்போர் பயிற்சி நடவடிக்கைகளில் இராணுவத்தின் 2500 காளாற்படையினர், 638 கடற்படை வீரர்கள் மற்றும் 506 விமானப் படை வீரர்களுடன் பங்களாதேஷ், சீனா, இந்தியா, சூடான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு படைவீரர்கள் 58 பேர் உட்பட சுமார் 3400ற்கு மேற்பட்ட படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி ஒருங்கிணைந்த “நகல் போர் பயிற்சி” நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு, கரையோர ரோந்துப் படகு, அதிவிரைவு துப்பாக்கிப் படகு மற்றும் தரையிறங்கல் தளவாடத்தொகுதிககள் என்பனவும் இலங்கை விமானப்படையின் மிக் மற்றும் கே8 தாக்குதல் ஜெட் விமானங்களும் எம்ஐ-17 மற்றும் பெல்-212 ஹெலிகாப்டர்களும் சீ-130 போக்குவரத்து பயண விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரிசிமலை, யான் ஓயா பகுதியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட நகல் போர் பயிற்சி நடவடிக்கையானது ரோந்து நடடவடிக்கை, படை ஊடுருவல், / முன் ஆட்குறைப்பு, புலனாய்வு மற்றும் கண்காணிப்பு, உருமறைப்புக் கண்காணிப்பு, படை இணைப்பு, படையினரின் தற்காலிக தரித்திருப்பு, சோதனை நடவடிக்கைகள் , திடீர் தாக்குதல்கள், ஆட்குறைப்பு மற்றும் தடுப்பு செயற்பாடுகள், மீட்பு நடவடிக்கைகள், கடத்தல் மற்றும் நகருக்குள் போரிடுதல் உள்ளிட்ட பல்வேறு போர் உத்திகளின் அடிப்படைப்படையில் இடம்பெற்றது.

இப்பயிற்சியின் மூலம் திட்டமிடல், தயார்படுத்தல், சூத்திரங்களை பயன்படுத்தல், ஒருங்கிணைத்தல், கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தந்திரோபாயங்கள், மற்றும் விஷேட கள நடவடிக்கைகள், போர் கண்காணிப்பு, கூட்டிணைப்பு, நினைவகப் படுத்தல், சோதனைகள், திடீர் தாக்குதல்கள், முன்னெச்செரிக்கை மற்றும் தடுப்புகள், மீட்பு பணிகள், அனர்த்த நிவாரணப்பணிகள் மற்றும் நகர்ப்புற சண்டைகள், பதுங்கு குழிகள் மீதான தாக்குததல்கள், வான் பரப்பு மற்றும் கடல் பிராந்திய மீட்பு நடவடிக்கைகள் என்பன தொடர்பான திறன்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும்

இந்நிகழ்வில் இராணுவ அதிகாரிகளின் பிரதானி, இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள், பங்களாதேஷ், சீனா, இந்தியா, சூடான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலேசகர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்ற படைவீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வைபவ ரீதியாக எதிர் வரும் சனிக்கிழமை ( செப்டம்பர், 24) இடம்பெறவுள்ளது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்