››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரரைக் கௌரவிப்பு

பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரரைக் கௌரவிப்பு

[2016/09/22]

பிரேசில் ரியோடி ஜெனிரோவில் இடம்பெற்ற 15வது பரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற ஓய்வுபெற்ற கோப்ரல் தினேஷ் பிரியந்த ஹேரத் நேற்று (செப்டம்பர், 21) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வு நேற்று மாலை பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

சர்வதேச விளையாட்டு போட்டி ஒன்றில் பங்குபற்றி நாட்டிற்கு பெருமை ஈட்டித்தந்த இவ்விளையாட்டு நாயகனுக்கு இந்நிகழ்வின்போது பல்வேறு பணப்பரிசில்கள் அளிக்கப்பப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதன்பிரகாரம் டயலோக் அக்சியடா நிறுவனம் 1 மில்லியன் ரூபாவை வழங்கி வைத்த அதேவேளை விளையாட்டு அமைச்சின் சுப்ரி வாசனா லொத்தர் சார்பில் 1.5 மில்லியன் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கோப்ரல் ஹேரத்தின் பயிற்றுவிப்பாளரான ரோஹித பெனாண்டோவுக்கும் இதன்போது டயலோக் அக்சியடா நிறுவனத்தினால் ரூபா. 250 ஆயிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இம்மாதம் 13ம் திகதி பிரேசிலில் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் கோப்ரல் ஹேரத் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் எப் 46ன் கீழ் நடைபெற்ற போட்டியில் சுமார் 58.23 மீட்டர் தூரத்தை எறிந்து மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் கடைமையாற்றிய கோப்ரல் ஹேரத் 2008ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காயங்களுக்குள்ளான பின் மருத்துவ அறிவுரைக்கமைய சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

இக் கௌரவிப்பு நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ. தயாசிறி ஜயசேகர, பிரதி அமைச்சர் கௌரவ எச்எம்எம் ஹரீஸ், இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, அரச அதிகாரிகள், பரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இவரின் திறமைக்கு அங்கீகாரமளிக்கும் வகையில் கோப்ரல் ஹேரத் சார்ஜன் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள் >>>

பராஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்கு பெருமையை ஈட்டித்தந்த இராணுவ வீரர்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்