››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கு மற்றும் கிழக்கு பாடசாலைகளுக்கிடையில் முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி

வடக்கு மற்றும் கிழக்கு பாடசாலைகளுக்கிடையில் முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி

[2016/09/22]

 

முரளி நல்லிணக்க கிண்ணத்திற்கான 20 - 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் புதன்கிழமை ( செப்டம்பர் -21 ) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வருடா வருடம் நடைபெற்றுவரும் இந்நிகழ்வு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையிலும் அவர்களை ஆர்வமூட்டும் வகையிலும் 5 ஆவது முறையாகவும் நடைபெற்றுவருகின்றது.

இவ்வருடம் நடைபெறவுள்ள சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் 16 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் பாடசாலை அணியினரை உள்ளடக்கிய இப்போட்டிகளுக்கு “குண ஜய சதுட்ட பதனம் நற்பணி மன்றம் அனுசரனை வழங்குவதோடு குசில் குணசேகர தலைமையிலான இந்நிகழ்வில் அனுபவமிக்க விளையாட்டு வீரர்களான முத்தையா முரளிதரன், குமார் சங்கக்காரா, மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் கலந்து சிறப்பித்ததக இலங்கை இராணுவ ஊடப்பிரிவு தெரிவிக்கிறது.

இப்பிராநதிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் ஆண்கள் அணியினருக்கு மாங்குளம் , யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதுடன் பெண்களுக்கான போட்டிகள் மாங்குளம் மகாவித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளது. இதேவேளை,குறித்த இப் போட்டியின் இறுதி நிகழ்வு (செப்டம்பர். 25) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் (செப்டம்பர் .24) அரை இறுதிப் போட்டி குறிப்பிட்ட இதே மைதானத்தில் நடைபெரவுள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி நெலும் பியசவில் உத்தியோகபூர்வமாக ( செப்டம்பர்.20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்புப்படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருனாசேகர, குசில் குணசேகர, குமார சங்கக்காரா மற்றும் கல்வித்திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான இளம் பாடசாலை விளையட்டுவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்