››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நல்லாட்சி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு ஐநா பொதுச் செயலாளர் பாராட்டு

நல்லாட்சி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு ஐநா பொதுச் செயலாளர் பாராட்டு

[2016/09/23]

நல்லாட்சி மற்றும் நல்லிணகம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவருவதை சுட்டிக்காட்டிய ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள், ஜனாதிபதியின் அம்முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களுக்குமிடையில் நேற்று (21) நியூயோர்க் நகரில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றபோதே பான் கீ மூன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சமயத்தில் இலங்கை அரசும், இலங்கை மக்களும் வெளிப்படுத்திய பேரன்பான வரவேற்புக்கும் உபசரிப்பிற்கும், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், இலங்கை அரசுக்கும் தனது நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கைக்கும் ஐநா சபையின் உறுப்பு நாடுகளுக்கும் பான் கீ மூன் அவர்கள் ஆற்றிய சேவைகளைப் பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், விசேடமாக பாரிஸ் மாநாட்டினூடாக அவர் ஆற்றிய சேவையினையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

ஐக்கிய நாடுகள் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் இலங்கைக்கு உதவிகளை வழங்கிய அனைத்து அமைப்புக்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம்.
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்