››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொமாண்டோ படை கடத்தலை தவிர்த்தல் மற்றும் பயணக்கைதிகளை விடுவித்தல் பயிற்ச்சியை மேற்கொண்டனர்

கொமாண்டோ படை கடத்தலை தவிர்த்தல் மற்றும் பயணக்கைதிகளை விடுவித்தல் பயிற்ச்சியை மேற்கொண்டனர்

[2016/09/23]

இலங்கை இராணுவப்படையின் கொமாண்டோ படை நடாத்திய கடத்தலை தவிர்த்தல் மற்றும் பயணக்கைதிகளை விடுவித்தல் பயிற்சியானது வியாழக்கிழமை (செப்டம்பர் -22) ஹம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ச விமானநிலையத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சிக்கு 6 குழுக்களாக பிரிக்கப்பட்ட 48 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினரால் கடத்தலை தவிர்த்தல் மற்றும் பயணக்கைதிகளை விடுவித்தலுக்கான பயிற்சிகள் இடம்பெற்றது. அத்தோடு நீர்க்காக தாக்குதல் பயிற்சி - VII இலும் பயணக்கைதிகளை விடுவித்தலுக்கான ஒரு சிறு பகுதி விளக்கப்பயிற்சியும் உள்ளடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை இப்பயிற்சியின் போது கடத்தலை தவிர்ப்பதில் அவர்களுடைய திறமையையும் மற்றும் பயணக்கைதிகளை விடுவித்தலிலுள்ள உத்திகளையும் வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்