››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினாரல் நிரமாணிக்கப்பட்ட 75 வீடுகள் மீரியபெத்த மண்சரிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீபாவளிக்கு முன்னர் கையளிக்கப்படும்

இராணுவத்தினாரல் நிரமாணிக்கப்பட்ட 75 வீடுகள் மீரியபெத்த மண்சரிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீபாவளிக்கு முன்னர் கையளிக்கப்படும்

[2016/09/24]

பாதிக்கப்பட்ட மீரியபெத்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்த மக்களுக்காக மகால்டெனியவில் இராணுவத்தினரால் புதிதாக நிர்மாணிக்கபட்ட 75 வீடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி தீபாளிக்கு முன்னர பயனாளிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அண்மையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும், அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர் மார்க்,பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பிரிகேடியர் சீ. எஸ் எட்டிபொல சிரேஷ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் பல நீர் வழங்கல் சபை, இலங்கை மின்சார சபை, பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் குறிப்பிட்ட இப் புதிய வீடுகள் திறந்து வைப்பதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது.

இராணுவத்தளபதி லெப் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்கள் மண்சரிவினால் பகுதியை நேரடியாகச் சென்று கள யதார்த்தங்களை மதிப்பீடு செய்த பின்னர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரச காணிகளில் குறிப்பிட்ட இவ் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்பிரகாரம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் அந்தந்த அமைச்சுக்களின் மேற்பார்வையின் கீழ் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மூலப்பொருள்களின் ஆதரவுடன் இராணுவ பொறியியலாளர் படைகள் மற்றும் பொறியியலாளர் சேவைகள் படையணியின் உறுப்பினர்கள் ஆகியோர் மே மாதம் 1ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு குறித்த 75 வீடுகளை நிர்மாணிக்கும் பணியை ஆரம்பித்தனர்.

குறித்த வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் பூரணப்படுத்தபட வேண்டும் எனவும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் குறித்த வீட்டு வளாகத்தில் மின்சார வேளிகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் எனவும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்