››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி – VII” சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி – VII” சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது

[2016/09/26]

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி – VII” இன் நிறைவு நிகழ்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் என்பன அண்மையில் ( செப்டம்பர். 24) மின்னேரிய காலாட்படை பிரிவினரின் பயிற்சி மையத்தில் இடம்பெற்றது.

குறித்த இப்போர் பயிற்சி நடவடிக்கைகளில் இராணுவத்தின் 2500 காலாட்படையினர், 638 கடற்படை வீரர்கள் மற்றும் 506 விமானப் படை வீரர்களுடன் பங்களாதேஷ், சீனா, இந்தியா, சூடான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு படைவீரர்கள் 58 பேர் உட்பட சுமார் 3400ற்கு மேற்பட்ட படை வீரர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீர்க்காக தாக்குதல் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பயிற்சியில் பங்குபற்றிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படைவீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

தொடர்பான செய்திகள் >>>

நீர்க்காக தாக்குதல் பயிற்சி - VII வெற்றிகரமாக நிறைவு

நீர்க்காக தாக்குதல் பயிற்சி 2016 இறுதிகட்ட நடவடிக்கைகளுக்கு தயார

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி ஆரம்பம்

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி செப்டெம்பரில் ஆரம்பம



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்