››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த கல்விக் கண்காட்சியில் இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த கல்விக் கண்காட்சியில் இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2016/09/29]

கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த கல்விக் கண்காட்சியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் இன்று (செப்டம்பர்.29) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் பதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் போது உரை நிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , மிக குறுகிய காலத்தில் பிரமாண்ட வளச்சியை எட்டிய இப்பாடசாலைகளைப் பாராட்டியதுடன் தனது அமைச்சு பௌதீக வளங்களுடன் கூடிய அனைத்து விதமான உதவிகளையும் அளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். படைவீர்ரர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கும் குறிப்பாக அவர்களின் பிள்ளைகளின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கான பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். சவால் மிகுந்த எதிர்கலத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் நன்கு திட்டமிடப்பட்ட கல்வி முறைமையினை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க எமக்கு சிறந்த கல்விப் பொறிமுறை அவசியம் எனவும் கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான புதிய திட்டங்கள் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரால் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பரீட்சை மைய கல்விமுறை மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை பிரதிபலிப்பதாக இல்லை என்ற கருத்தினை முன்வைத்த இராஜாங்க அமைச்சர், அவர்களின் அறிவு, திறமைகள் மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்தகூடிய ஒரு புதிய பொறிமுறை அவசியம் எனவும் வலியுறித்தினார். கல்வியானது எதிகாலத்திற்கான சிறந்த முதலீடாக அமைவதனால் இத்துறைக்கு அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவமளிகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகள் கல்வித்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் தேசத்தை நேசிக்கும் வகையில் அவ்வாறான எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டும்.
மேலும் அவர் தனது உரையின் நிறைவில் மானவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் இப்பாடசாலை உச்ச நிலையை எட்டும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர், இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அதிதிகள் ஆகியோர் இணைந்து பாடசாலை மாணவர்களால் நிறுவப்பட்டுள்ள கண்காட்சி கூடகளைப் பார்வையிட்டதுடன் அவர்களின் திறமைகளையும் பராட்டினர்.

“தச வசரக அபிமான் “ எனும் தலைப்பில் அமைந்த இக்கல்விக் கண்காட்சி பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பத்தாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பாடசாலையானது முப்படையினர் மற்றும் பொலிசாரின் பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியினை வழங்கும் வகையில் 2007ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. 172 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் இன்று 2500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மேலும் இப்பாடசாலை கல்வி மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகள் என்பனவற்றில் மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை ஈட்டியுள்ளது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படை அதிகாரிகளின் பிரதானி, பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு>>

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டார்

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய விடுதி வசதிகள்

விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

பாதுகாப்பு சேவை கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதுசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்