››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்புச் செயலாளர் சிவில் பாதுகாப்பு படையினரின் இண்டர் பெட்டாலியன் தடகள சாம்பியன்ஷிப் நிகழ்வில் பங்கேற்பு

பாதுகாப்புச் செயலாளர் சிவில் பாதுகாப்பு படையினரின் இண்டர் பெட்டாலியன் தடகள சாம்பியன்ஷிப் நிகழ்வில் பங்கேற்பு

[2016/10/22]

சிவில் பாதுகாப்பு படைத் திணைக்களத்தின் இண்டர் பெட்டாலியன் தடகள சாம்பியன்ஷிப் 2016 அனுராதபுர வடமத்திய விளையாட்டரங்கில் நடைபெற்றது. நடைபெற்ற குறித்த இந்நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி போட்டியின் இறுதி நிகழ்வின் பிரதம அதிதியாக இன்று (ஒக்.21) கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளருக்கு , சிவில் பாதுகாப்பு படைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சந்திராணந்த பல்லேகம அவர்களினால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறித்த இவ் விளையாட்டுப் போட்டி சிவில் பாதுகாப்பு படையினரின் உடல் மற்றும் உளவியல் மன நிலை போன்றவற்றினை விருத்தி செய்யும் வகையில் நடத்தப்பட்டதுடன் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் திறமையான இளைஞர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் இடம் பெற்றது.

ஐந்தாவது தடவையாக நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டி நாடு பூராகவும் காணப்படுகின்ற 22 படைப்பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 400 விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் 19 ம் திகதி ஆரம்பமானது.அத்தடன் 12 தட மற்றும் கள போட்டிகிளின் கீழ் நடைபெற்றது.

கடந்த யுத்தத்தின்போது சிவில் பாதுகாப்பு படையினரினரால் நாட்டிற்கு வழங்கிய சேவையை கருத்திற் கொண்டு அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 39000 சிவில் பாதுகாப்பு படையினருக்கு ஓய்வூதிய வசதிகளுடன் அரச நிரந்தர சேவையில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய நிகழ்வின்போது சிவில் பாதுகாப்பு படையினர் 20 பேருக்கு செயலாளர் ஹெட்டியாராச்சி அவர்களினால் 60 வயதை அடையும்போது ஓய்வூதியத்தினை பெறத் தகுதியுடைய ஓய்வூதிய கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், ஒழுக்கம் மிகவும் பிரதான பண்பாகும் அதனை விளையாட்டின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய சமூதாயத்தில் ஒழுக்கம் இல்லை எனத் தெரிவித்த செயாலாளர், விளையாட்டு நடவடிக்கைகள் ஒரு முழுமையான மற்றும் ஆரோக்கியமான மனித சமுகத்தினை வளர்க்கவும் பங்களிப்பு செயகிறது இதேவேளை, வெற்றி அல்லது தோல்வி போன்வற்றினை ஒருவரினால் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கினையும் வளர்க்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் யுத்தத்தின் போது எல்லைக் கிராமங்களை பாதுகாப்பதின் மூலம் சிவில் பாதுகாப்பு படையினரின் உயிர்த்தியாகம் மற்றும் பணிச்சுமை போன்றவற்றிகும் தனது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார்.

வில்பத்து படைப்பிரிவு வெற்றி வாகை சூடிய அதேவேளை,வெளி ஓயா படைப்பிரிவு இரண்டம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. பொலன்றுவ படைப்பிரிவின் கேஏஏஜி ஆரியபால மற்றும் எச்எம்டீ ஆகியோர் சிறந்த ஆண் மற்றும் பெண் தடகள வீரர்களுகாக தெரிவு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கான கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியன பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது சிவில் பாதுகப்பு படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் சிரேஷ்ட சிவில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு படை அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையனரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்