››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ரணவிரு ரியல் ஸ்டார் மிஷன் – v அனுசரணையாளர்களுக்கு பாராட்டு

ரணவிரு ரியல் ஸ்டார் மிஷன் – v அனுசரணையாளர்களுக்கு பாராட்டு

[2016/10/22]

ரணவிரு ரியல் ஸ்டார் மிஷன் – v இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனுசரணை வழங்கியவர்களை பாராட்டும் வகையில் அண்மையில் (ஒக்.21 கிங்ஸ்வெரி ஹோட்டலில்) ‘அப்ரிசியேசன் நைட்’ எனும் நிகழ்வொன்று நடைபெற்றது. நடைபெற்ற குறித்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

ரணவிரு ரியல் ஸ்டார் மிசன் – v இன் மாபெரும் இறுதிப் போட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையல் நேற்று (செப்டம்பர்.11) சுகததாச உள்ளகரங்கில் நடைபெற்றது. அத்துடன் ரணவிரு ரியல் ஸ்டார், இராணுவ வீரர்களின் இசைத் திறமைகளை வெளிக் கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின்போது அனுசரணை வழங்கிய டயலாக் அக்சியட்ட, இலங்கை ரூபவாஹினி, சொஃப்ட்லொஜிக் மற்றும் டொயாட்ட லங்கா போன்ற நிறுவனங்கள் பாராட்டப்பட்டதுடன் நடுவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பலரும் பாரட்டப்பட்டனர். அத்துடன் அவர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இப்போட்டியின் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்ட இலங்கை கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் அமில சிறிவர்த்தனவிற்கு டொயாட்ட லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் புத்தம் புதிய டொயாட்ட கார் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

செயலாளர் ஹெட்டியாராச்சி இங்கு கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில், குறித்த இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிய வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில், அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள், நடுவர்கள் குழாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்