››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்காக விசேட செயலணி – ஜனாதிபதி

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்காக விசேட செயலணி – ஜனாதிபதி

[2016/10/22]

சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக விசேட செயலணியை நியமித்து தேவையான அபிவிருத்தி செயற்திட்டங்களை அமுல்படுத்தவிருப்பதாக கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
திருகோணமலை மெக்கெய்ஸர் விளையாட்டரங்கில் நடைபெற்ற சுற்றாடல் மாநாடு மற்றும் ‘வனரோபா’ தேசிய மரநடுகை செயற்திட்டத்திட்ட தேசிய நிகழ்வில் இன்று (21) உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காடழித்தல், மண்வெட்டுதல், சட்டவிரோத மணல் அகழ்வு அடங்கலாக எமது நாட்டில் இடம்பெறும் சுற்றாடல் அழிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றால்; அனைத்து மக்களும் பாரதூரமான சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்குமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அச் செயற்பாடுகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

29 வீதமாகவுள்ள நாட்டின் வனப்பரப்பை 32 வீதம் வரை உயர்த்துவது அரசாங்கத்தின் இலக்காகு மென்று அவர் குறிப்பிட்டார். இன்றைய தேசிய மரநடுகை தினத்தை முன்னிட்டு ஒரு பில்லியன் கிளிசீரியா மரங்களை நடும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கந்தளாய் வன பாதுகாப்புப் பிரதேசத்தில் கருங்காலி மரக்கன்றை நட்டு தேசிய மரநடுகை திட்டத்தை ஆரம்பித்ததுடன் பாடசாலைப் பிள்ளைகள், பொலீசார், முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர் போன்றோரின் பங்களிப்புடன் இரண்டு ஹெக்ரேயர் நிலப்பரப்பில் 2000 கன்றுகள் நடுகையும் ஆரம்பிக்கப்பட்து.

அதன் பின்னர் பாடசாலை மாணவ மாணவியருடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் பற்றி கேட்டறிந்துகொண்டார். சுற்றாடல் பாதுகாப்புக்காக சிறப்பான பங்களிப்புச் செய்தவர்கள் ஜனாதிபதி அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண அரச அலுவலர்களால் அனர்த்த நிவாரண செயற்பாடுகளுக்காக வழங்கட்பட்ட காசோலை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, பிரதியமைச்சர்களான அனுராத ஜயரத்ன, சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ, முதலமைச்சர் நசீர் அகமட் ஆகிய பிரமுகர்கள் உட்பட பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அலுவலர்களும் மேலும் பெருமளவு பொதுமக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்