››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜங்க அமைச்சருடன் சந்திப்பு

சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜங்க அமைச்சருடன் சந்திப்பு

[2016/10/25]

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு ஹெய்ன்ஸ் வோக்கர் நேடர்கூர்ன் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜெவர்த்தன அவர்களை இன்று (ஒக்டோபர் , 25 ) பாதுகாப்பு அமைச்சில் வைத்துச் சந்தித்தார். இந்நிகழ்வின் போது சுவிஸ் நாட்டுக்கான பாதுகாப்பு இணை ஆலோசகர் கேர்ணல் ஜெனரல் ஸ்டாப் (GS) திரு செரிஸ்ட்ஒப் கேர்ட்ச் அவர்களும் சமுகமளித்திருந்தார்.

இங்கு இடம்பெற்ற சிநேகப்பூர்வமான சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் சுவிஸ் நாட்டு உயர்ஸ்தானிகர் ஹெய்ன்ஸ் வோக்கர் நேடர்கூர்ன் அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்