››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி மாணவர்கள் 100 துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக் கொண்டனர்

கிளிநொச்சி மாணவர்கள் 100 துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக் கொண்டனர்

[2016/10/26]

கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகளை இலங்கை இராணுவம் அண்மையில் மேற்கொண்டது. இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் குறித்த இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கன்றன.

மாங்குள பாடசாலை ஒன்றில் அண்மையில் (அக்டோபர், 23) இடம்பெற்ற வைபவத்தின் போது தேவைப்பாடுகள் நிலவிய 100 பாடசாலை மாணவர்களுக்கு இத் துவிச்சக்கர வண்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேற்படி திட்டத்திற்கான அனுசரணை 'குண சத்துட ஜய பதனம' நிறுவனத்தினால் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 57வது பிரிவின் அதிகாரி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்த்தன, அனுசரணையாளர்களின் பிரதிநிதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட கால்பந்தாட்ட நிகழ்வு ஒன்று அண்மையில் (அக்டோபர், 22) கிளிநொச்சி பரவிபாஞ்சான் மைதானத்தில் இடம்பெற்றது. 'நல்லிணக்க கால்பந்தாட்டம்' என அறியப்படும் இப்போட்டி நிகழ்வு, இப்பிரதேசத்தில் வசிக்கும் சிவிலியன்களின் விளையாட்டுத்திறனை அதிகரிக்கும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் ஒழுங்கு செய்யப்பட்திருந்தது. மேலும் இதில் சிவிலியன்களுக்கும் இரானுவத்தினருக்குமிடையிலும் போட்டிகள் பல இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்