››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

படையினருக்கு புதிய வாய்ப்புக்களை வழங்கவுள்ள CRD கண்டுபிடிப்புகள்

படையினருக்கு புதிய வாய்ப்புக்களை வழங்கவுள்ள CRD கண்டுபிடிப்புகள்

பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மையத்தின் 6 புதிய கண்டுபிடிப்புக்களை இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படையினருக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (ஒக்டோபர். 20) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறைந்த செலவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட குறித்த கண்டுபிடிப்புக்களின் சர்வதேச சந்தைப் பெறுமதி 1.6 மில்லியன் ரூபாய் ஆகும்.

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மையமானது (CRD), இந் நாட்டின் ஆயுதப் படையினரின் தொழிநுட்பம் ஆய்வு மற்றும் அபிவிருத்தியினை மேற்கொள்வதை இலக்காக கொண்டு 2௦௦6ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை CRDயானது எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு உறுதுணையாக அமையவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. மேலும் அது பல்கலைகழக துறைசார் புத்திஜீவிகளின் ஒத்துழைப்பு மற்றும் தொழிநுட்ப கல்வி நிலையங்களிடமிருந்து பெறப்படும் உதவிகள் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வுகள்ள பலவற்றை நடாத்தி வருகின்றது.

உயர் தொழிநுட்ப இராணுவ முறைமை

போர்க்களத்தின் தொழில்நுட்ப ஆதிக்கம் அதிகரித்து வருவது உணரப்பட்டதையடுத்து , CRD ஆனது எதிர்கால பாதுகாப்பு சவால்களை முறியடிக்கும் வகையில் உயர் தொழிநுட்ப இராணுவ முறைமையினை விருத்தி செய்துள்ளது. இம்முறைமையானது உலகின் மிக உயர்தரமான நகர்வு, தளம் மற்றும் நேரடி கண்காணிப்பு தொழில்நுட்பம் ஆகியன அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

நேரடி கண்காணிப்பு முறைமையானது படைகள் மற்றும் வாகணங்கள், இடக்குறிச்சொல்லிட்ட படங்களுடன் சம்பவ அறிக்கைக்கு சம்பவ அறிக்கை முறை, வரைபட உருவாக்கம், மற்றும் தானியங்கி தூரத்தை அளத்தல் மற்றும் முன்னோக்கி அளக்கும் முறை, ஆகியனவும் உள்ளடங்கியுள்ளது. உயர் தொழிநுட்ப இராணுவ முறைமையானது ஒரு துல்லியமான தானியங்கி ஒருங்கிணைப்புடன் கூடிய முதலாவது வகையாக இந் நாட்டிலே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாற் சுழலி படப்பிடிப்பான் (Quadcopter)

நாற் சுழலி படப்பிடிப்பான் (Quadcopter) CRD இன் ஆளில்லா வானூர்தியானது இராணுவத்திற்கு உதவும் வகையிலும் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அளவையியல் திணைக்களத்திற்கு தேவையான தகவல்களை சேகரிப்பதற்கு உதவும் வகையிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான பயன்பாடாக, குறித்த பகுதிக்கு நேரடியாக ஒரு சிறப்பு குழுவினை ஈடுபடுத்தாமலே அது குறித்து துல்லியமான மற்றும் சிறந்த பெறுமதியான தளத்தகவல்களை சேகரிக்க முடியுமாக இருப்பதாகும்.

D Quod Copter ஆனது அனர்த்தம் இடம்பெறும் பகுதியிலிருந்து உரிய நேரக் காட்சியை, அனர்த்தம் இடம்பெறும் பகுதியின் உயர் ரக புவிசார் குறியீட்டுடனான படங்கள் மாற்றிக்கொடுத்தல் மற்றும் GPS தகவல்களை மாற்றிக்கொடுக்கும் திறன் வாய்ந்ததாக உள்ளது.

கள முனை பீரங்கி சிமுலேட்டர் முறைமை

CRD யினால் வடிவமைக்கப்பட்ட கள முனை பீரங்கி சிமுலேட்டர்(FASS) முறையின் மூலம் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மற்றும் எறிகணைத்தாக்குதல் நடைமுறை பயிற்சியினை முன்னெடுப்பதற்கான சிறந்த முறையாகவும் உள்ளது. மேலும் இதன் மூலம் முன்னோக்கி அவதானிக்கவும் எறிகணைத்தாக்குதல் எதிரிகளின் இலக்குகளை அறிந்துகொள்வதற்கும் அவற்றினை செயலிழக்கச்செய்யவும் முடியும்.
FASS மூலம் தொழிநுட்ப முறையிலான சுடுகையினை முன்னெடுப்பதற்கும் விரைவில் செயலிழக்கச்செய்யும் திறமைகளும், கள OP ஏணி சுடுகை, இரண்டு புள்ளிகள் நேரியல் சுடுகை, மைய புள்ளியை நேரியல் சுடுகை, GF இலக்கு சுடுகை, விமான வெடிப்பு சுடுகை, ஒளிவெள்ளம் சுடுகை, துல்லிய சுடுகை மற்றும் புகை சுடுகை ஆகிய திறமைகளையும் கொண்டுள்ளது. இம்முரைமையானது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பிரதேசத்தினுடைய முப்பரிமாண நிலப்பகுதி மற்றும் இருபரிமாண வரைபடங்கள் மற்றும் வித்தியாசமான சுட்ட்றாடல் நிலைமைகளையும் வெளிக்காட்டும் திறமை கொண்டதாகவும் காணப்படுகிறது. மேலும் இவற்ற்றுள் 85 mm, 122 mm, 130 mm and 152 mm எறிகணைகள் கொண்ட துப்பாக்கிகளும் காணப்படுகின்றது.

FASS பாவனையின் மூலம் பயிற்சி நடவடிக்கைகளுக்கா பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பாவனையினை குறைக்க முடியும் அதேவேளை இவ்வாறான செயற்பாடுகள் அந்நியச் செலாவணியினை சேமிக்க உதவியாகவும் காணப்படும்.

சிறு கை துப்பாக்கி சூட்டு சிமுலேட்டர்

CRD யினால் வடிவமைக்கப்பட்ட சிறு கை துப்பாக்கி சூட்டு சிமுலேட்டர் (SAFS) முறையின் மூலம் நேரடி வெடிபொருட்களின்றி சிறு துப்பாக்கிச்சூட்டு பயிற்ச்சிகளை மேட்கொள்ளலாம். இம்முறைமையானது துப்பாக்கிச் சூட்டில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் ஆரம்பகட்ட ஆற்றல்களை விருத்திசெய்வதோடு மட்டுமல்லாது சுடுகையாளிகளின் திறமை மட்டத்தினையும் அதிகரிக்கும். இம்முரறைமையானது ஒருமுறை துப்பாக்கி சூட்டின்போது இலக்கினை தாக்கும் புள்ளியினை ஒளியூட்டும் திறன் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது.

உள்ளடக்கிய சுழற்சி நுட்பத்துடன் கூடிய இவ்வடிவமைப்பானது துப்பாக்கிச்சூட்டு பயிற்ச்சியில் ஈடுபடுவோருக்கு உண்மையான உணர்வினை வழங்கும் திறன் கொண்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மேட்கொள்ளப்படும் பரீசார்த்த் சுடுகையின் போது 1mm வரை துல்லியமாக வழங்கமுடியும். அத்துடன் துப்பாக்கியினை பிடித்து சூடுகையிலுள்ள பிழைகளை ஆய்வுசெய்தல், சுவாசம், நிலைப்பாடு, தானியங்கி சராசரி புள்ளியின் தாக்கம் (எம்பிஐ) கணக்கீடு மற்றும் இரவுநேர துப்பாக்கி சூட்டு பயிற்ச்சிகள் போன்ற பயன்பாட்டினையும் பெற்று க்கொள்ளலாம். அத்துடன் விபத்துக்களை குறைத்துக்கொள்ளவும், மனிதவலு, பயிற்சிக்குத்தேவையான உட்கட்டமைப்பு தேவைப்பாடுகள் மற்றும் வெடிமருந்துகள் சேமிப்பதன் மூலம் செலவினையும் குறைத்துக்கொள்ள முடியும்.

ரெஜிமெண்டல் கணக்கியல் மென்பொருள்

பலவருட ஆய்வுகளின் பின்னர் CRD மூலம் வடிவமைக்கப்பட்ட கணக்கியல் முறைமையானது மனிதர்களினால் விடப்படும் தவறுகளையும், ஆவணங்கள் வீண்விரயம், தரவு இழப்பீடு மற்றும் இராணுவ கணக்குகளை கையாளும்போது கையேடு பதிவு முறைகளில் ஏற்படுகின்ற ஊழல்கள் போன்றவற்றை தவிர்க்கும் வகையிலான ரெஜிமெண்டல் கணக்கியல் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இம் முறைமை பயணாளிகளுக்கு நாளந்த கணக்கியல் செயட்பாடுகளை சரியான முறையில் பயன்படுத்தவும் மற்றும் அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

இலங்கை இராணுவத்தின் கணக்கினை கையாள்வதற்கு விரிவான கணக்கியல் முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திறன் மற்றும் துல்லியமான செயற்பாடுகளை மேற்கொள்வதோடு எமது தாய்மொழியிலேயே இதனை பயன்படுத்த முடியும்.

கே-8 யுத்த விமான சிமுலேட்டர்

CRD மூலம் வடிவமைக்கப்பட்ட கே-8 யுத்த விமான சிமுலேட்டர் ஆனது இலங்கை விமானப்படை விமானியின் பயிற்சிக்கான தேவையினை வழங்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விமானமானது இலங்கை விமானப்படை விமானியின் உயர்தர விமான பயிற்சி மற்றும் யுத்த விமான பயிற்சிக்காக தற்பொழுது பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இவர்களுக்கு வழங்கப்படும் மேலதிகமான பயிற்சி வழங்க்குவதிலிருந்து தவிர்த்துக்கொள்வதோடு அதிக செலவுகள், வளங்களின் பவனை, ஆபத்துக்கள் மற்றும் உயிர் அச்சுருத்தல்கலிளிருந்தும் தவிர்த்துக்கொள்ளலாம்
கே-8 யுத்த விமான சிமுலேட்டர் முறைமை ஆரம்பிக்கும் செயற்பாடுகள், சோதனைகள் போன்றவற்றை செயற்படுத்த முடியும். அத்தோடு இவற்றிலுள்ள இரட்டை காக்பிட் முறைமையில் கற்றல் மற்றும் கற்பித்தல் முகாமைத்துவ முறையினை மேம்படுத்துவதற்கு பாரியளவில் உறுதுணையாக இருக்கும்.
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்