››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கீரிமலையில் ஜனாதிபதியினால் 100 வீடுகள் கையளிப்பு

கீரிமலையில் ஜனாதிபதியினால் 100 வீடுகள் கையளிப்பு

[2016/11/01]

யாழ் நகரில் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்களினால் வீடுகள் கையளிக்கப்பட்டன. கீரிமலை பிரதேசத்தில் நேற்று (ஒக்டோபர்.31) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி உத்தியோக பூர்வமாக 1௦௦ வீடுகளை உரிமையாளர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பதுகாப்புச் செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீரிமலையில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டமானது தற்பொழுது உள்நாட்டினுள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 971 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன் பிரகாரம் முதற்கட்டமாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் பாதுகாப்பு அமைச்சுடன் யாழ்ப்பாண பாதுகாப்புப்படை தலைமையகமும் இணைந்து வெற்றிகரமாக முடிக்கப்பட்ட கீரிமலை வீட்டுத்திட்டத்தின் மூலம் வீட்டினை பெறுவதற்கு மிகவும் பொருத்தமான 100 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை, பலாலி இராணுவ முகாமுக்குட்பட்ட 454 ஏக்கர் காணிகளையும், ஜனாதிபதி விடுவித்தார்.
இவ்வீட்டுத்திட்டத்தினை இலங்கை பொறியியலாளர் 4 வது படைப்பிரிவு, இலங்கை பொறியாளர்கள் சேவைகள் 3 வது படைப்பிரிவு , 9 பொறியாளர் சேவைகள் ரெஜிமென்ட் 9 வது படைப்பிரிவு, பொறியாளர் சேவைகள் ரெஜிமென்ட் 14 வது படைப்பிரிவு, மற்றும் களம் பொறியாளர் ரெஜிமென்ட் 10 வது படைப்பிரிவு ஆகியன 4 மாதங்களுக்குள் 1௦௦ வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஒவ்வொரு வீடும் 2 மில்லயன் பெறுமதியாகும் ஆனால் இச் செயற்றிட்டத்திற்கு இராணுவத்தினரின் உதவி வழங்கப்பட்டதன் மூலம் 900,000 ரூபாவிற்குள் நிர்மாணிக்கப்பட்டு சுமார் 121 மில்லியன் ரூபாவினை அரசினால் சேமிக்க முடிந்தது.

540 சதுர அடி நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட ஒவ்வொரு வீடும் இரண்டு படுக்கையறைகள், வாழும் பகுதி, சமையலறை என்பனவற்றுடன் நீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் கொண்டதாகும். அத்துடன் வீதிகள் உள்ளிட்ட சமுக நிலையம், விளையாட்டுமைதானம், மீன் சந்தை, முன்பள்ளி, பொலிஸ் நிலையம் மற்றும் பலவேறுபட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளன.

இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மதம் மத அலுவல்கள் அமைச்சர்புனர் கௌரவ. டி.எம்.சுவாமிநாதன் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ. விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண ஆளுநர், யாழ் மாவட்ட செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி கடற்படைத்தளபதி இராணுவ தளபதி சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள்,அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்