››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இந்திய 4வது இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி நிறைவுப்பெற்றது

இலங்கை இந்திய 4வது இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி நிறைவுப்பெற்றது

[2016/11/08]

மித்ரா சக்தி’என அழைக்கப்படும் இந்திய – இலங்கை இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த கூட்டுப் பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்வு, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்றது.அத்துடன் 14 நாட்களைக் கொண்ட குறித்த இப் பயிற்சி கடந்த மாதம் (ஒக்டேபர்.28) அம்பேபுஸ்ஸவில் உள்ள இலங்கை சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு வார காலத்தைக் கொண்ட இக் கூட்டுப் பயிற்சியில் இந்திய இராணுவத்தின் 6 அதிகாரிகள் உட்பட 45 படை வீரர்களும் இலங்கை இராணுவத்தின் இலேசாயுத படைப்பிரிவின் படைவீரர்களும் இணைந்து பங்குபற்றியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த இக் கூட்டுப்பயிற்சி நாடுகடந்த பயங்கரவாதம், இணைந்து செயலாற்றும் திறன்கள், கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இரு தரப்பினரின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல் போன்ற விடயங்களை விருத்தி செய்யும் வகையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இறுதி நிறைவு நாள் நிகழ்வில் இந்திய இராணுவக் குழுவுக்கு பொறுப்பான பிரிகேடியர் சுஜீத் சிவாஜி பாட்டில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இப் பயிற்சி இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாஅவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றதுடன் காலாட்படையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சகி கல்லகே அவர களினால் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டது.
இதுவரை இக்கூட்டுப் பயிற்சி இந்தியாவில் இரு தடவைகளும் இலங்கை கொமாண்டோவின் குடா ஓயாபயிற்சி கல்லூரியில் ஒரு தடவையும் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்