››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“கோல் டயலோக் 2016” நிறைவு நிகழ்வில் செயலாளர் பங்கேற்பு

“கோல் டயலோக் 2016” நிறைவு நிகழ்வில் செயலாளர் பங்கேற்பு

[2016/11/30]

கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற்ற “கோல் டயலோக் 2016” நிறைவு நாள் நிகழ்வில் பதுகாப்பு செயலாளர் பொறியிலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் (நவம்பர். 29) கலந்து சிறப்பித்தார். பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த இவ் இரண்டு நாள் மாநாடு தொடர்ச்சியாக இவ்வருடமும் 7ஆவது தடவையாக இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதகள் பலரும் கடற்படைப் பிரதாணிகளும் கலந்து கொண்டனர்.

இவ் இறுதி நாள் நிகழ்வின்போது, மாநாட்டில் பங்குபற்றிய மற்றும் விஷேட உரை நிகழ்த்திய பிரதிநிதிகளை பாதுகாப்பு செயாலாளர் பாராட்டியதுடன் அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.

குறித்த இம்மாநாடு அண்மையில் (நவம்பர்.28) ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மாநாடு சர்வதேச நாடுகளுக்கிடையே பாரிய வரவேற்பை பெற்றதோடு, பிராந்தியத்தில் மிக முக்கியமான ஒரு கடல்வழி பாதுகாப்பு மாநாடாகவும் அமைந்தது.

இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, தூதரக உறுப்பினர்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்