››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் யாழ் பொது வைத்தியசாலையில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பு

கடற்படையினரால் யாழ் பொது வைத்தியசாலையில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பு

[2016/12/02]

குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் சமூக நலன்புரி நடவடிக்கைளின் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று ( டிசம்பர். 01) திறந்துவைக்கப்பட்டது. மேலும் நாடுமுழுவதும் இதுபோன்ற 56 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாறு நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் இவ் வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளிகள், வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் வருகை தரும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நன்மையடையவுள்ளனர்.

சிறுநீரகம் சார்ந்த நோய்கள் பரவளாக காணப்படும் பிரதேசங்களில் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பல நிறுவப்பட்டு வருகின்றன. மேற்படி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஜனாதிபதி விசேட செயலணி நிதி அனுசரணையுடன் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் பணிப்புரையின் பேரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்