››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நாங்கள் சர்வதேச சமூகங்களின் வேண்டுகோளுக்கினங்க வடக்கில் கணிகளை விடுவிக்கவில்லை- பாதுகாப்புச் செயலாளர்

நாங்கள் சர்வதேச சமூகங்களின் வேண்டுகோளுக்கினங்க வடக்கில் கணிகளை விடுவிக்கவில்லை- பாதுகாப்புச் செயலாளர்

[2016/12/05]

காலி ரிச்சர்ட் பத்திரன வித்தியாலயத்தில் அண்மையில் (டிசம்பர்.03) நடைபெற்ற “நில மெஹவர” நடமாடும் சேவை நிகழச்சித் திட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

குறித்த இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தொலைநோக்கு எண்ணக்கருவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டதுடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஏற்படு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர்,வட கிழக்கு பகுதிகள் ஆபத்தில் இருப்பதாக சில தீவிரவாதிகள் பரப்பும் தவறான குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்தார். எவருக்கும் இந்தப் பகுதிகளுக்கு வருகை தந்து இப் பிரதேச வாழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள்ள பொருத்தமான வாழ்வாதார சூழல் தொடர்பாக ஆராய முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்தில் அரச படையினர் வசம் இருந்த காணிகளை மீண்டும் காணி உரிமையாளர்களிடம் சர்வதேச தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் வழங்கவில்லை மாறாக எங்டகளுடைய சகோதர சகோதரிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை இனங்கண்டு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் பெருத்தமான தீர்வை வழங்குவுதே குறித்த இச் செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமாகும்.மேலும், குறித்த இத்திட்டம் 2017ஆம் ஆண்டு 14ஆம் திகதி ஜனவரி மாதமும் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.இத்திட்டத்தின் முதலாவது கட்டம் பொலன்னறுவ மாவட்டத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்