››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கு பொதுமக்களுக்கு இராணுவ படையினரின் உதவி

வடக்கு பொதுமக்களுக்கு இராணுவ படையினரின் உதவி.

கிளிநொச்சி பொதுமக்களின் அவசர வேண்டுகோளினை கருத்திற்கொண்டு இலங்கை இராணுவ படைப்பிரிவினர் கரடிப்பொக்கு உருத்திரபுரம் பாலம் ஊடான வீதி போக்குவரத்தினை இலகு படுத்தியுள்ளது. நிர்மாணப்பணியிலுள்ள குறித்த வீதி கடுமையான மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாகவுள்ளது. இதன் காரணமாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் இராணுவ படையினர் மக்களின் பாதுக்காப்பினை கருத்திற்கொண்டு போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் பாலத்தின் இரு புறங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, உருத்திர புரம் முறிப்பு குளத்தின் கால்வாய் அணைக்கட்டின் நீர்மட்ட அதிகரிப்பினால் ஏற்படுடவிருந்த பாரிய அனர்த்தத்தினை தகுந்த நேரத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் சிவகுலம் பகுதி பாதுகாக்கப்பட்டது. மேலும், படையினர் குறித்த குளத்தின் அனைக்கட்டினை வலுப்படுத்தும் வகையில் சுமார் 500 மணல் மூட்டைகள் இட்டதன் மூலம் நீர்கசிவினால் ஏற்படவிருந்த அனர்த்தம் பாதுகாக்கப்பட்டது.

சீரற்ற காலநிலை காரணமாக வீட்டின் மீது தென்னை மரம் சரிந்து விழுந்து அதற்குள் அகப்பட்ட 70 வயது மூதாட்டி மற்றும் 8 வயது குழந்தை ஆகியோர் இராணுவத்தினரால் மீடகப்பட்டனர். அத்துடன் பாதிக்கப்பட்ட குறித்த இருவருக்கும் அருகிலுள்ள இடத்தில் தங்குமிட வாசதிகளை இராணுவத்தினர் ஏற்படுத்தி கொடுத்ததுடன். சேதமடைந்த வீட்டினையும் திருத்தி கொடுத்தனர்.

“வானரூப” எனும் தேசிய மார நடுகை திட்டத்தின் கீழ் கிளிநொச்சி துணுக்கை தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கிளிநொச்சி இராணுவ படைப்பிரிவினரால் 143 பலா மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டன.

     

இதேவேளை யாழ் தலைமையக இராணுவ பாதுகாப்பு படைப்பிரிவினர் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பலாலி தள்ளடி ரோமன் கிறிஸ்தவ தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் 223 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குறித்த பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு ஓய்வுபெற்ற இராணுவத்தளபதி அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அண்மையில் வன்னி பாதுகாப்பு படை தலைமையக படையினர் வெஹரதென்னே பிரதேசத்தில் வறுமைக் கோட்டில் வாழந்து வந்த இரு குடும்பத்தினருக்கு இரு வீடுகளை நிர்மாணித்து கொடுத்தனர். அத்துடன் குறித்த இவ் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இராணுவத்தினரின் தொழிலாளர் மற்றும் நிபுணத்துவம் ஆகியன வழங்கப்பட்ட அதேவேளை, நுகேகொடையில் உள்ள இலங்கை தம்மரத்ன விகாரையின் சமூக சேவைகள் அமைப்பு தேவையான பொருட்களை வழங்கி உதவி செய்தது.

இதேவேளை, முல்லைத்தீவு, 6வது இலங்கை இராணுவ பொலிஸ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் 4 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வவொன்று நடத்தப்பட்டதுடன் போதி பூஜா நிகழ்வொன்றும் இடம்பெற்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்