››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமன்னிப்பு கால எல்லைக்குள் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சுமார் 3000 இற்கும் அதிகமானவர்கள் சட்டரீதியாக அனுமதிபெற முறையீடு.

பொதுமன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற சுமார் 3000 இற்கும் அதிகமானவர்கள் சட்டரீதியாக விலக முறையீடு

[2016/12/20]

பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலத்தினுள் விடுமுறை அனுமதியின்றி சேவைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்கள் தமது சேவை தலைமையகத்திற்கு அல்லது தங்களது படைப்பிரிவிற்கு (ரெஜிமென்ட்) சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பிப்பதன் மூலம் சட்ட ரீதியாக விலகிச் செல்ல முடியும்.

இதேவேளை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 03 இராணுவ அதிகாரிகள் 2983 இராணுவ வீரர்கள், 1 கடற்படை அதிகாரி மற்றும் 256 கடற்படையினர் மற்றும் 07 விமானப்படை அதிகாரிகள் 113 விமானப்படை வீரர்கள் சமூகமளித்து சட்ட ரீதியாக விலகிச் செல்ல அறிவித்துள்ள இதேவேளை, இரண்டு இராணுவ அதிகாரி மற்றும் 2494 இராணுவப்படையினர் சட்ட ரீதியாக விலகிச் செல்லவதற்கான அனுமதியினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு ஊடக மையத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவத்துள்ளார்.

இப்பொதுமன்னிப்பானது இவ்வருடம் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பொதுமன்னிப்புக் காலம் என்பதோடு முதலாவது பொதுமன்னிப்புக் காலம் ஜூன் 13 இலிருந்து ஜூலை 12 வரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சேவையிலிருந்து விலக விரும்பும் படை வீரர்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சேவை மையங்களுக்கு அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

தொடர்பான செய்திகள் >>

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்