››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஆரம்பம்

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஆரம்பம்

[2017/01/01]

பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி . 02) இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

குறித்த இந்நிகழ்வு, அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அத்துடன் தாய் நாட்டின் சுபீட்சத்திற்காக உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை நினைவு கூர்ந்து இரு நிமிட மௌனாஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் அதிகாரிகளினால் சத்திய பிரமாணமும் எடுக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், 2017ம் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்ததுடன் தேசிய குறிக்கோளினை அடையும் வகையில் நல்லிணக்கம் , பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட செயற்றிட்டங்களை செயற்படுத்த உறுதியுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் தனது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட அவர் இந்நிகழ்வின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிற்றுண்டி விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிறி , அமைச்சில் பணிபுரியும் மேலதிக செயலாளர்கள், அதிதிகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மற்றும் அமைச்சின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்