››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஊரணி மீன்பிடி துறைமுகம் மீண்டும் மீனவர்களிடம்

ஊரணி மீன்பிடி துறைமுகம் மீண்டும் மீனவர்களிடம்

[2017/01/16]

ஊரணி மீன்பிடி துறைமுகத்தை மீண்டும் உள்ளூர் மீனவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் (ஜனவரி.14) யாழ் பாதுகாப்பு படை தலைமையக படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இம் முன்னெடுப்பின் காரணமாக ஊரணி காரியோரப் பகுதியில் வசிக்கும் மீனவர் சமூகம் நன்மையடையவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இத்துறைமுகம் உள்ளூர் மீனவர்களிடம் மீண்டும் கையளிக்கப்படுவதன் மூலம் ஊரணி, தைட்டி மற்றும் நல்லினக்கபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 27 வருடங்களின் பின் தமது வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையவுள்ளது.

325 மீட்டர் நீளத்தைக் கொண்ட மீன்பிடி துறைமுகத்தில் 100 மீன்பிடிப் படகுகள் எந்நேரத்திலும் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட முடியும்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அரச அதிகாரிகள், யாழ் பாதுகாப்பு படை தலைமையக கட்டளையதிகாரி, வடபிராந்திய கடற்படை கட்டளையதிகாரி மற்றும் பெருந்தொகையான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்