››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் வெளியிடப்படும் சான்றிதழ் இன்று முதல் கணனி முறைப்படுத்தப்படுகிறது…

வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் வெளியிடப்படும் சான்றிதழ் இன்று முதல் கணனி முறைப்படுத்தப்படுகிறது…

[2017/01/18]

வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் வணிகக் கப்பல்களில் பணிபுரிவோரை பதிவுசெய்து வழங்கும் இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDO) மற்றும் தகுதிச் சான்றிதழ்களை கணனி முறைமையில் வெளியிட்டுவைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை சமுத்திர வணிகக் கப்பற் துறை அலுவல்களை நிருவகித்தல் மற்றும் அதற்கான சட்டதிட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பு துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சின் கீழ் இயங்கும் வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.

கப்பல்களில் தொழில்களுக்காக செல்லும் அனைத்து கப்பற் துறையினரும் இந்த இடையறாத விலக்கற் சான்றிதழைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

சான்றிதழ்களை வழங்கும் போது இதுவரையில் நவீன தொழில்நுட்ப முறைமைகள் பின்பற்றப்படாத காரணத்தினாலும் உயர்தரம் வாய்ந்த பாதுகாப்பு அடிப்படைகளுடன் கூடிய சான்றிதழ் பத்திரங்கள் வழங்கப்படாத காரணத்தினாலும் வணிக கப்பற் துறையினரும் கப்பல் உரிமையாளர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுக்கவேண்டியிருந்தது. மேலும் இதன் மூலம் இலகுவாக போலிச் சான்றிதழ்களை தயாரித்தல் மற்றும் தகுதியற்றவர்கள் தொழில்களுக்கு நியமிக்கப்படுதல் போன்ற காரணங்களினால் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படவும் தகுதியானவர்கள் தொழில் பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகவும் காரணமாக இருந்துவந்தது.

புதிய சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதுவரை வணிக கப்பற் துறையினர், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்கள் குறிப்பாக வெளிநாட்டு துறைமுகங்களில் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கும் நிலை குறைவடைந்துள்ளதுடன், இலங்கை வணிகக் கப்பற்துறையினருக்கு சர்வதேச ரீதியில் கேள்வி அதிகரிப்பதன் மூலம் தொழில் வாய்ப்புகள் அதிகரித்து பெருமளவு அந்நிய செலாவணியும் நாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, வணிக கப்பற் துறை செயலகத்தின் செயலாளர் பீ ஜயம்பதி, பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி : ஜனாதிபதி செய்தி ஊடகம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்