››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பிரித் வைபவ நிகழ்வு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பிரித் வைபவ நிகழ்வு

[2017/01/18]

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பத்தாண்டுகள் நிறைவினை முன்னிட்டு இடம்பெற்ற்ற முழு இரவு பிரித் வைபவ நிகழ்வு கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் அண்மையில் (ஜனவரி . 16) இடம்பெற்றது.

குறித்த இம்மதநிகழ்வு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி பாதுகாப்பு சேவைகள் கல்லூரியானது கொழும்பு -2 மலே வீதியில் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 4.5 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது. குறித்த கல்லூரியானது பிரபலமான கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளல் தொடர்பாக இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் எதிகொள்ளும் பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டதாகும். எளிமையான தொடக்கத்தைக் கொண்டிருந்த குறித்த பாடசாலை தற்பொழுது 2500க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 172 ஆசிரியர்களையும் கொண்டுள்ளதோடு இக்கல்லூரியானது பத்து வருட காலத்துக்குள் பொதுப்பரீட்சை மற்றும் போட்டிகளில் தனது கல்வி மற்றும் இதர கல்வி நடவடிக்கைகளின் வளர்ச்சியினை மேட்கொண்டுள்ளது.

குறித்த இந்நிகழ்வில் மகா சங்கநாயக்க உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் சேவாவனிதா பிரிவின் தலைவி திருமதி வசந்தா குணவர்த்தன, அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

     
     

மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு>>

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த கல்விக் கண்காட்சியில் இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டார்

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய விடுதி வசதிகள்

விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

பாதுகாப்பு சேவை கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதுசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்