››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வரட்சி நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்……

வரட்சி நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்……

[2017/01/19]

நாட்டில் ஏற்படக்கூடிய வரட்சி நிலையை அரசாங்கம் என்ற வகையில் எதிர்கொண்டு மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

மின் சக்தி அமைச்சு, மகாவலி அமைச்சு மற்றும் நீர்விநியோக அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றினை அமைத்து வரட்சியினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை இயன்றளவில் குறைத்து மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
மேற்கூறிய அமைச்சுக்களின் ஊடாக வரட்சியை எதிர்கொள்வதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடலொன்று இதன்போது இடம்பெற்றதுடன், எமது நீர்தோற்றுவாய்களை பாதுகாத்து இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்காலத்தில் குறைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது சேதமடைந்துள்ள குளங்களை புனரமைப்பதற்கான செயற்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவது பற்றி இதன்போது அறிவுறுத்திய ஜனாதிபதி அவர்கள், நீரை சிக்கனமாக பாவித்து அதனை பேணுவதற்கான அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டங்களின் தேவைப்பாடு குறித்தும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, துமிந்த திசாநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, லசந்த அழகியவன்ன ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்