››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“ரணவிரு ரியல் ஸ்டார்- மிஷன் V” இசை நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு புதிய வீடு

“ரணவிரு ரியல் ஸ்டார்- மிஷன் V” இசை நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு புதிய வீடு

[2017/01/19]

ஹொரண பிரபுத்த ரணவிரு கிராமத்தில் “ரணவிரு ரியல் ஸ்டார்- மிஷன் V” இசை நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கு புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜனவரி .19) கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின்போது குறித்த இசை நிகழ்வில் வெற்றிபெற்ற முதல் போட்டியாளர் தவிர்ந்த ஏனைய 10 வெற்றியாளர்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க முதல் முறையாக இவ் இசை நிகழ்வில் வெற்றிபெற்ற 36 போட்டியாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளதாகவும், குறித்த வீடுகளை அடுத்த கட்ட இசை நிகழ்வினை ஆரம்பிப்பதற்கு முன்னர் நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்நிகழ்வில் பாதுகாப்பு படையினர் பங்குபற்றிய்தையிட்டு பாராட்டு தெரிவித்த அதேவேளை, வெற்றியாளர்களுக்கு வீட்டினை நிர்மாணிக்க உதவிய டயலொக் அக்சியடா நிறுவனத்திற்கு நன்றியையும் தெரிவித்தார்

மேலும் உரையாற்ற்றுகையில், யாழ்பாணத்தில் இடம் பெயர்ந்தவர்களுக்கான 100 வீடுகளை பாதுகாப்பு படையினர் அவர்களின் அர்பணிப்பு மற்றும் திறமைகள் மூலம் இரண்டரை மாத குறுகிய காலப்பகுதிக்குள் வெற்றிகரமாக நிர்மாணித்துக் கொடுத்துள்ளதாகவும் அத்துடன் இங்கு மேலும் 250 வீடுகளை நிர்மாணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவத்தளபதி, அரச அதிகாரிகள், டயலொக் அக்சியடா நிறுவன பிரதிநிதிகள், முப்படையினர், ரணவிரு ரியல் ஸ்டார் போட்டியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்