››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சேவா வனிதா பிரிவு கணேபல்ல கனிஷ்ட பாடசாலை நூலகத்திற்கு நன்கொடை

சேவா வனிதா பிரிவு கணேபல்ல கனிஷ்ட பாடசாலை நூலகத்திற்கு நன்கொடை

[2017/01/20]

கித்துல்கல கணேபல்ல கனிஷ்ட பாடசாலையின் நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகை புத்தகங்கள், புத்தக ராக்கைகள், மற்றும் அலுமாரி ஆகியன பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் நன்கொடையாக இன்று (ஜனவரி .19) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது அதிபரிடம் குறித்த உபகரணங்கள் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி வசந்தா குணவர்த்தன அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பாடசாலை 185 மாணவர்களையும் 15 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு சிறிய பாடசாலையாகும். இப்பாடசாலையில் நீண்ட நாட்களாக உணரப்பட்ட தேவையினை சேவா வனிதா பிரிவின் நன்கொடை நிறைவு செய்துள்ளதாகவும் இப்பாடசாலையின் மூலிகை தோட்டத்தில் மூலிகை மரம் ஒன்றினையும் சேவா வனிதா பிரிவின் தலைவியினால் நாட்டி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன


இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்