››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு செயலாளர் சீ ஆர் டி நிலையத்தின் புதிய விடுதி திறந்துவைப்பு

பாதுகாப்பு செயலாளர் சீ ஆர் டி நிலையத்தின் புதிய விடுதி திறந்துவைப்பு

[2017/01/21]

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலைய அதிகாரிகளின் வசதியினை கருத்தில்கொண்டு இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய விடுதி ஒன்றினை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜனவரி .20) திறந்துவைத்தார்.
ஹோமாகம பிடிபான இல் அமைந்துள்ள புதிய விடுதியினை திறப்பதற்கு வருகைதந்த செயலாளர் அவர்கள் சீ ஆர் டி நிலைய பிரதம பணிப்பாளர் பிரிகேடியர் எஸ் டீ எஸ் சில்வா அவர்களால் வரவேட்கப்பட்ட பின்னர் குறித்த நிலையம் செயலாளர் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதிவாய்ந்த இத்திட்டம் திறமை மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த முப்படையினரின் ஒத்துழைப்புடன் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த இந்நிகழ்வின்போது செயலாளர் அவர்கள் சீ ஆர் டி நிலையத்திற்கான புதிய இணையதளம் ( www.crd.lk ) ஒன்றினை ஆரம்பித்து வைத்ததுடன், நிலைய பணிப்பாளர் அவர்களால் இந்நிகழ்வினை முன்னிட்டு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் ( பாதுகாப்பு ) திரு. சரத் குமார, தேசிய புலனாய்வு பிரதானி திரு. சிசிர மென்டிஸ், முப்படையின் உயர் அதிகாரிகள், மற்றும் சீ ஆர் டி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த இந்நிலையமானது முப்படையினரின் ஆய்வு மற்றும் அபிவிருத்தியினை முன்னெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்