››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல்

[2017/01/23]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் அண்மையில் (ஜனவரி.19) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த இப்பாதுகாப்பு கலந்துரையாடல் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

'தென் ஆசியாவின் காலநிலை மாற்றமும் அனர்த்த முகாமைத்துவமும்' எனும் தலைப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற இந்நிகழ்வில், கொன்ராட் அடினோவர் ஸ்டிப்டங் நிறுவனத்தின் சக்திவள பாதுகாப்பு மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான பிராந்திய திட்டப்பணிப்பாளர் கலாநிதி. பீட்டர் ஹெபெலே (Dr. Peter Hefele),நேபாள தென் ஆசிய கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி. நிஷ்கால் என் பாண்டே (Dr. Nishchal N. Pandey) உள்ளிட்ட இராஜதந்திர பணிகளுடன் தொடர்புடைய வல்லுனர்கள், அரச அதிகாரிகள், முப்பட்டையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த இப்பாதுகாப்பு கலந்துரையாடல், இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த கலந்துரையாடல் வரிசையில் நான்காவது முறையாக இடம்பெற்றது. மேலும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் பாதுகாப்பு அமைச்சு சார்பில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளை முன்னெடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சிந்தனைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்