››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படை வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வீடுகளில் மேலும் பல வசதிகள

முப்படை வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வீடுகளில் மேலும் பல வசதிகள

[2017/01/23]

அண்மையில் (ஜனவரி .20) கதான போலகல பிரதேசத்தில் முப்படை வீரர்களுக்கான நவீன வசதிகள் கொண்ட கட்டிடங்கள் மற்றும் 'முப்படை வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வீடு' என்பனவற்றை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும், புதுப்பிக்கப்பட்ட பிரதான கட்டிடத்தில் விசாலமான சமையலறை, சாப்பாட்டு அறை, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ அறை ஆகியன உள்ளடங்கலாக புதிதாக திறந்துவைக்கப்பட்ட கட்டிடத்தில் நான்கு புதிய அறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முப்படை வீரர்களுக்கான குறித்த வீடு நீர்கொழும்பு நகரத்திலிருந்து 12 கிலோ மீட்டருக்கு அப்பால் இரண்டு ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 1850 ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களும் இங்குள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு வசித்துவரும் 22 முப்படை வீரர்கள் முப்படை தளபதிகள் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியுடன் முன்னாள் இராணுவ சங்கத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்