››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மேலும் ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

மேலும் ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

[2017/01/24]

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து புதிய நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்காக நேற்று (ஜனவரி.23) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன. குறித்த இச்சுத்திகரிப்பு நிலையங்கள் பதவிய அளகிம்புலவ சேதியகிரி ரஜமகா விகாரை, வவுனியா மடுகந்த, பொளிபிதிகம தலாவ, பல்லேகல மற்றும் பொத்துவில் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

நிறுவப்பட்டுள்ள நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சேதியகிரி ரஜமகா விகாரையில் தரித்துள்ள பௌத்த துறவிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள 350 குடும்பங்களும், மடுகந்தவில் 400 குடும்பங்களும், தலாவையில் 450 குடும்பங்களும், பல்லேகளவில் 600 குடும்பங்களும், பொத்துவில்லில் 680 குடும்பங்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

மேலும், சேதியகிரி ரஜமகா விகாரையில் நிறுவப்பட்ட நீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கான நிதி அனுசரணை புத்த சாசன அமைச்சினால் வழங்கப்பட்ட அதேவேளை இதர நீர்சுத்திகரிப்பு நிலையங்கள், சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டன.

நாட்டில் சிறுநீரகம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் இதுவரை 112 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இலங்கை கடற்படையினர் நிறுவியுள்ளனர். இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட இச்சமூக நலத்திட்டத்தின் மூலம் சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களும் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் நாளாந்தம் சுத்தமான குடிநீரைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்